Petta Trailer

Petta Trailer : படு மாஸாக பேட்ட படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க பிளாஷ் பேக் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக மிரட்டியுள்ளார். மேலும் பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் டீஸர் ரஜினி பிறந்த நாளன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதே போல பாடல்கள் அனைத்தும் அனிருத் இசையில் அடித்து தூள் கிளப்பி விட்டது.

இவைகளை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு பேட்ட படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி தற்போது இப்படத்தின் ட்ரைலர் படு மாஸாக வெளியாகி உள்ளது. ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.