Petta Theaterical Rights

Petta Theaterical Rights : பேட்ட படத்தில் உலகளாவிய தியேட்டர் ரைட்ஸ் விற்று தீர்ந்துள்ளது. இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட்ட.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் உலகளாவிய தியேட்டர் உரிமை விற்று தீர்ந்துள்ளது.

பிரபல முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தான் இப்படத்தின் தியேட்டர் ரைட்ஸ் உரிமையை மொத்தமாக வாங்கியுள்ளார். அதுவும் மிக பெரிய விலைக்கு வாங்கியுள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு என்றாலே படத்தின் ப்ரோமோஷன்கள் வித்தியாசமாக வேற லெவலில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த பொங்கல் எங்க தலைவர் பொங்கல் தான் தெறிக்க விடுவோம் என மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

பொங்கல் ரேஸில் இருந்து பேட்ட படம் விலகி கொள்வதாக நேற்று தகவல் வைரலாகி இருந்ததை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் பேட்ட பொங்கல் ரிலீஸ் தான் என ட்வீட் மூலம் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.