Petta Teaser

Petta Teaser : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் பேட்ட. இப்படம் 2019-ம் ஆண்டு ஜனவரியில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

பேட்ட படத்தின் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் டிசம்பர் 3-ம் தேதியும் செகண்ட் சிங்கிள் டிராக் டிசம்பர் 9-ம் தேதியும் வெளியாக உள்ளது.

இதெல்லாம் ஒரு புறம் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இப்படத்தின் டீசருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது அது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி இப்பட்ட்டத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ தகவலும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு அடுத்ததடுத்து கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.