Petta Teaser
Petta Teaser

Petta Teaser : காளி ஆட்டம் ஆரம்பம் என்பது போல மரண மாஸாக பேட்ட டீஸர் சில மணி நிமிடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்க்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

பாபி சிம்ஹா, சனந்த் ஷெட்டி, நவாஸுதீன் சித்திக், சசிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 3-ம் தேதி மரண மாஸ் சிங்கிள் டிராக்கும் டிசம்பர் 7-ம் தேதி உல்லல்லா டிராக்கும் வெளியாகி வரவேற்பை பெற்றதை அடுத்து டிசம்பர் 9-ல் நடந்த இசை வெளியீட்டு விழாவில் அனைத்து பாடல்களும் வெளியாகின.

இதனை தொடர்ந்து இன்று (12.12.18) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 11 மணிக்கு இப்படத்தின் டீஸர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது.

அதன்படி தற்போது பேட்ட படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

யூ ட்யூபில் இந்த டீஸர் என்னென்ன சாதனைகளை படைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Petta - Official Teaser | Superstar Rajinikanth | Sun Pictures | Karthik Subbaraj | Anirudh