Petta Vs Viswasam

Petta Release Update :

பொங்கல் மோதலில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் ஒரு நாள் பின் வாங்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தற்போது பேட்ட படத்திலும் தல அஜித் விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களும் பொங்கல் ரிலீஸ் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். ஆனால் ரிலீஸ் தேதி என்ன என்பது இன்று வரை அறிவிக்கப்படாமலேயே இருந்து வருகிறது.

கோலிவுட் வட்டாரங்களில் மட்டும் இரண்டுமே ஒரே நாளில் அதாவது ஜனவரி 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது என பேசப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது மற்றொரு தகவல் வைரலாக தொடங்கியுள்ளது. அது என்னவென்றால் விஸ்வாசம் படத்துடனான மோதலில் இருந்து பேட்ட ஒரு நாள் பின்வாங்கி கொள்வதாக அதாவது ஜனவரி 11-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் சரியான உண்மை என்ன என்பது படக்குழு ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தால் தான் தெரிய வரும். அறிவிப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.