
Viswasam Producer : பேட்ட பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்து விட்டனர். இது குறித்து விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் அதிரடியான கருத்துகளை கூறியுள்ளார்.
தல அஜித் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.
நயன்தாரா நாயகியாக நடிக்க, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார்.
விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் பொங்கல் ரிலீஸ் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது இது குறித்து விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது விஸ்வாசம் பொங்கலுக்கு நிச்சயம் வரும்.
இதற்கங்க கடந்த 8 மாதங்களாக உழைத்து வருகிறோம் என கூறியுள்ளார். மேலும் பேட்ட இப்போது தான் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்கள்.
அஜித்திற்கென மிக ரசிகர்கள் உள்ளார்கள். அவர்களின் கூட்டம் நிச்சயம் விஸ்வாசம் படத்தை பார்க்க வரும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.