
Petta Release : பேட்ட படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரின் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் நாயகியாக சிம்ரனும் மற்றொரு நாயகியாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். அனிருத் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படத்தை உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்தோ அல்லது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்தோ வெளியாகவில்லை. விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.