
Petta Rajinikanth : பேட்ட படத்தின் ரிலீஸ் தேதியால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருத்தப்பட்டுள்ளனர்
சன் பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என நேற்று வெளியான போஸ்டரில் அறிவித்து இருந்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் சூப்பர் ஸ்டாருக்கு வருத்தம் தானாம். காரணம் ரஜினிகாந்த் பேட்ட ரிலீஸ் பொங்கலுக்கு வேண்டாம் என கூறியுள்ளார்.
ஒரே வருடத்தில் காலா, 2 பாயிண்ட் ஓ, பேட்ட என மூன்று படமும் ரிலீஸ் ஆனால் பெரியதாக எதிர்பார்ப்பு இருக்காது என கூறியுள்ளார்.
ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனமோ இது எங்க படம். பொங்கலுக்கு படம் வெளியாகி ஆக வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளனர்.
பொங்கலுக்கு பேட்ட ரிலீஸ் என படக்குழுவில் உள்ளவர்கள் பலருக்கே நேற்று தான் தெரிந்தது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதே ரஜினிக்கு வருத்தம் தானாம்.