
Petta Release : விஸ்வாசம் படத்துடன் மோத இருந்த பேட்ட படத்தின் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள பேட்ட படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு வெளியானது.
அதுமட்டுமில்லாமல் சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படமும், ஜி.வி பிரகாஷின் வாட்ச் மேன் படத்தின் டிரைலரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின.
இத்தனை ஒரே நாளில் மோதினால் பாக்ஸ் ஆஃபிஸில் மிக பெரிய அடி விழும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தினர் திரைப்பட வெளியீட்டு குழு படத்தின் ரிலீஸ் குறித்து ஆலோசனை செய்துள்ளது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் பேட்ட படத்தின் ரிலீஸை ஜனவரி 26-ம் தேதிக்கு தள்ளி வைத்து கொள்ளலாம் என பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.