Petta Mems

Petta Mems : பேட்ட பாடலை மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார் பிரபல பாடகரான கங்கை அமரன். இதனால் ரஜினி ரசிகர்கள் அவர் மீது கொந்தளிப்பில் உள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் கடந்த டிசம்பர் 7-ம் தேதி வெளியாகி இருந்தது. மரண மாஸ் என்ற பெயரில் வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கங்கை அமரன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனிருத்தை கலாய்த்து ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த மீம்ஸால் ரஜினி ரசிகர் செம கோபமடைந்து கங்கை அமரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.