பேட்ட படம் குறித்து கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட டீவீட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.
இந்திய சினமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்த படம் பேட்ட.
கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்கள் போலவே திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் பேட்ட பார்த்து விட்டு அவருடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட் 19,000-க்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.