Petta Audio Launch

Petta Audi Launch Venue :

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது, இதனால் சூப்பர் ஸ்ரார் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் பேட்ட. பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

மேலும் கடந்த டிசம்பர் 3-ம் தேதி மரண மாஸ் என்ற முதல் சிங்கிள் டிராக் வெளியானது, மேலும் இரண்டாவது சிங்கிள் டிராக் வரும் டிசம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா தளபதி விஜயின் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த அதே தனியார் கல்லூரி வளாகத்திலேயே நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மரண மாஸ் சிங்கிள் டிராக் யூ ட்யூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.