Petromax Movie Review | Tamannaah | Tamil Cinema News | Kollywood Cinema News | Trending Cinema News | Kalakkal Cinema Reviews
ரோஹிணி வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா சோலோ ஹீரோயினாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பெட்ரோமாக்ஸ்.

Petromax Movie Review : தமன்னாவுடன் இணைந்து யோகி பாபு, முனீஷ்காந்த், காளி வெங்கட், சத்யன், பிரேம், லிவிங்ஸ்டன், மைம் கோபி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் விமர்சனத்தை இப்பொது பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

தன்னுடைய அம்மா அப்பாவுடன் வசித்து வரும் பிரேமிற்கு மலேசியாவில் வேலை கிடைத்து அவர் சென்று விட அதன் பின்னர் பெற்றோர்களை மறந்து விடுகிறார். இதனால் இவர்கள் ஆதவற்றோர் ஆசிரமத்தில் இருந்து தமன்னாவை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.

அதன் பின்னர் ஒரு குழந்தையும் இன்னொருவரும் இவர்களிடம் அடைக்கலம் தேடி வர அவர்களையும் தங்களது வீட்டிலேயே தங்க வைத்து விடுகின்றனர்.

ஒரு நாள் பிரேம் மலேசியாவில் இருந்து வந்து தனக்கு தொழில் லாஸ் ஆகி விட்டது, வீட்டை விற்று பணம் கொடுங்கள் என பெற்றோரிடம் கேட்க அவர்கள் மறுக்க வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுகிறார், இதில் அவரின் அம்மா மட்டும் மிஸ்ஸாகி விடுகிறார்.

அதன் பின்னர் தமன்னா மற்றும் இறந்தவர்களின் ஆன்மா பிரேமை எப்படி பழி வாங்குகிறது என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

பாஸ் ஆகுமா பப்பி? – விமர்சனம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

தமன்னா, யோகி பாபு, முனீஷ்காந்த், சத்யன் என அனைவரும் தங்களது நடிப்பை முழுமையாக கொடுத்துள்ளனர்.

முனீஷ் காந்தின் காமெடி யோகி பாபுவின் காமெடியை விட பல மடங்கு ஒர்க் அவுட் ஆகியுள்ளது. யோகி பாபு கெஸ்ட் ரோல் போல ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

தொழில்நுட்பம் :

இசை :

திகில் படம் என்பதால் அதற்கேற்றார் போல படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜிப்ரான்.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

டானி ரேமண்ட் ஒளிப்பதிவு சிறப்பு, லியோ ஜான் பால் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

ஜி.ஆர் சுரேந்தர்நாத்தின் கதையை சரியான பாதையில் இயக்கியுள்ளார் ரோஹின் வெங்கடேசன். முதல் பத்தியில் கொஞ்சம் சலிப்பு தட்டினாலும் இரண்டாம் பாதியில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுகிறார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் காமெடி
2. நடிகர் நடிகைகளின் நடிப்பு

தம்ப்ஸ் டவுன் :

1. காமெடி படம் என்பதால் கதையில் அழுத்தம் இல்லை
2. வழக்கமா லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
பெட்ரோமாக்ஸ் விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
petromax-movie-review-2மொத்தத்தில் பெட்ரோமாக்ஸ் சிரித்து மகிழ பார்க்கலாம்.