Petrol Bomb :
Petrol Bomb :

Petrol Bomb :

சென்னை: சென்னையில் திமுக பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

திமுகவின் அண்ணாநகர் பகுதி செயலாளர் பரமசிவம் ஆவார். இவர் நேற்று சென்னை தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதிகளில் அமமுக, எஸ்டிபிஐ போன்ற கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை தடுத்துள்ளார்.

இதனால், இன்று காலை சுமார் 5.30 மணி அளவில் கீழ்பாக்கம் அருகே =டி.பி.சத்திரத்தில் உள்ள இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர்.

சம்பவ நேரத்தில், கார் எரிந்து சேதமாகியது. தகவலறிந்து மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பரமசிவம் வீட்டிற்கு சென்று சேதமடைந்த காரை பார்வையிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் தயாநிதிமாறன், “நேற்று இரவு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சித்த சில கட்சியினரை திமுக கழகத்தினர் தடுத்து நிறுத்தினர் இதனால் மர்மநபர்கள் யாரோ இவ்வாறு செய்துள்ளனர்” என்று கூறினார்.

இதனால் அங்கு வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் சமயத்தில் இவ்வாறு பணம் கொடுப்பது தவறு .

இதன்காரணமாக இன்று அதிகாலை திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசபட்டுள்ளது.

Petrol Bomb :
Petrol Bomb :

இதனை சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பாமகவும் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும் என கூறியுள்ளார்.

மேலும் தோல்வி பயத்தில் இந்த தாக்குதலை பாமக நடத்தியிருக்கலாம் எனக் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து பரமசிவம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக பிரமுகர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here