Peter Paul Interview Controversy
Peter Paul Interview Controversy

பீட்டர் பால் வனிதாவுடன் சேர்ந்து கொடுத்த முதல் பேட்டியே அவருக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

Peter Paul Interview Controversy : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ள வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இருவரும் சேர்ந்து அலுவலகம் ஒன்றில் பேட்டி ஒன்றை அளித்திருந்தனர். அந்தப் பேட்டியில் பீட்டர் பால் இது தன்னுடைய ஆபீஸ் என்பது போல பேசினார்.

ஆனால் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் இது பீட்டர் பால் அலுவலகம் கிடையாது. அவர் பொய் கூறுகிறார். பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரின் அலுவலகம். பீட்டர் பால் இயற்பெயர் இந்த படத்தின் கதையை அவர் தெளிவாக கூறவில்லை ஆகையால் அவர்கள் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பீட்டர் கையை விட்டு சென்றது.

Mahabharatham Special : மகாபாரதத்திற்கு பிறகு இன்றும் உயிருடன் இருக்கும் ஐந்து நபர்கள் – அவர்கள் யார் யார் தெரியுமா?

அதன் பின்னர் அவரை அந்த அலுவலகத்தின் வாசலில் கூட சேர்ப்பதில்லை. அவர் தயாரிப்பாளரிடம் ஒரே ஒரு பேட்டி என கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் தான் அனுமதியளித்தார். ஆனால் இவர் என்னுடைய ஆபீஸ் என கூறியுள்ளார். இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என கூறியுள்ளார்.

அதேபோல் பீட்டர் பாலின் மகன் பேட்டி ஒன்றில் அந்த பேட்டியை நான் முழுமையாகப் பார்க்கவில்லை. பாதி தான் பார்த்தேன் அதுவரை அவர் கூறிய அனைத்தும் பொய் தான். அவர் எழுதிய ஸ்கூல் பீஸ், காலேஜ் கட்டியதாக கூறுகிறார்.

ஆனால் உண்மையில் அவர் எனக்கு எந்த பீஸூம் கட்டவில்லை என் அம்மா தான் கட்டினார் என்று கூறியுள்ளார். நான் ஒரு நல்ல போன் கேட்டு வந்தேன். பல நாட்களாக சாக்கு சொல்லி வந்த இவர் அதன் பின்னர் ஒரு போன் வாங்கி கொடுத்தார்.

ஆனால் அந்த போனுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் கூட எங்கும் கிடைக்கவில்லை. திருமணத்துக்கு முன்பு வரை அவரிடம் பேசிக் கொண்டு தான் இருந்தேன்.

ஆனால் அவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்த பிறகு அவருடன் பேசுவதில்லை என கூறியுள்ளார்.