Perfect Food for Winter
Perfect Food for Winter

Perfect Food for Winter :

இந்த குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளும் உணவுப்பொருள்கள் பற்றி தெரியுமா ?

* நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருக்கின்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ,குளிர்கால தொற்று நோய்கள் எளிதில் தாக்கும்.

இதனால் அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் வருவது எளிது. இவற்றில் இருந்து பாதுகாக்க நாம் அதிகமாக வைட்டமின் சி, வைட்டமின் E,செலினியம், பீட்டாகரோட்டின் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* வைட்டமின் Cஅதிகமுள்ள உணவுகள்:

– வைட்டமின் சி சிட்ரஸ் பழங்களில் அதிகமாக இருக்கின்றது. உதாரணமாக எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஸ்ட்ராபெரி,பச்சைப்பயிறு, முளைக்கட்டிய பயிறு, கருப்பு மிளகு இவற்றில் அதிகமாக இருக்கின்றது .

* வைட்டமின் E அதிகமுள்ள உணவுகள்:

-சூரியகாந்தி விதை, சோயா பீன்ஸ்.

*செலினியம் :

-மீன், இறைச்சி, தானியங்கள், பூமிக்கு அடியில் அதிக நேரம் இருக்கும் கிழங்கு வகைகள்.

*பீட்டா கெரோட்டின் :

– பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மாம்பழம், கேரட்.

பனிகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள்.:

*குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களையும் ,நீரையும் பருகுவதை தவிர்க்கவும்.

*தாகம் எடுக்க வில்லை என்றாலும் ,அடிக்கடி சூடான நீரை குடிக்க வேண்டும்.

*குளிர்காலத்தில் அடிக்கடி மிளகு ரசம், மிளகு தக்காளி சூப் இவைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

* வெளியில் உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here