Peranbu Movie Review

Peranbu Review : ராம் இயக்கத்தில் பி.எல் தேனப்பன் தயாரிப்பில் மம்மூட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பேரன்பு.

கதைக்களம் :

இப்படத்தில் மம்மூட்டி துபாயில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மகள் பிறந்திருப்பதாகவும் ஆனால் மூளை முடக்கு வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

மகள் இப்படி மாற்று திறனாளியாக பிறந்து விட்டாலே என்பதால் அவர் தன் மகளை கூட பார்க்க வராமல் இருந்து விடுகிறார்.

மம்மூட்டியின் மனைவியே குழந்தையை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் இனியும் என்னால் பெண்ணை பார்த்து கொள்ள முடியாது. இனி நீங்க பார்த்துக்கோங்க என வேறொரு வாழ்க்கையை தேடி சென்று விடுகிறார்.

அதன் பின்னர் மம்மூட்டி தன்னுடைய மகளுக்காக வாழ தொடங்குகிறார். என்னதான் மாற்று திறனாளியாக இருந்தால் அந்தந்த வயதிற்கேற்ற ஆசைகள் உருவாவது தானே இயற்கை. அதே தான் இந்த பெண்ணிற்கும் ஏற்படுகிறது.

இதையெல்லாம் எப்படி கடந்து வருகிறார்கள்? இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பது தான் இப்படத்தின் கதையும் களமும்.

மம்மூட்டி :

மம்மூட்டி செய்தியாளர் சந்திப்பில் கூறியபடியே அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை. மாற்று திறனாளி பெண்ணின் அப்பாவாகவே வாழ்ந்துள்ளார்.

தங்க மீன்கள் சாதனா :

தங்க மீன்கள் படத்திற்கு பிறகு சாதனா மீண்டும் ராம் இயக்கத்தில் நடித்துள்ளார். தங்க மீன்கள் போலவே சாதனா இந்த படத்திலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு இடத்தில் கூட குறை கூட முடியாத அளவிற்கு தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அஞ்சலி :

அஞ்சலி இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். இருந்தாலும் மிகவும் அழகாக தன்னுடைய நடிப்பை கொடுத்துள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்திற்கு மிக பெரிய பலம். காட்சிகளை விட இப்படத்தின் இசை தான் கதையை வெளிப்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது.

எடிட்டிங் & ஒளிப்பதிவு :

சூர்யா பிரதமனின் எடிட்டிங், தேனீஸ்வரின் ஒளிப்பதிவு என இரண்டுமே இப்படத்திற்கு கூடுதல் பலம். இருவருமே படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்துள்ளனர்.

தம்ப்ஸ் அப் :

1. மம்மூட்டி, சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் என ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு.
2. படத்தின் கதை
3. திருநங்கைகளின் பற்றியும் பேசியது பாராட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here