Pepper Chappathi
Pepper Chappathi

Pepper Chappathi : வெறும் சப்பாத்தி என்றாலே குழந்தைகள் சாப்பிடுவதே இல்லை, ஆனால் அதில் சிறிது வித்யாசம் கொண்டு வந்து சமைத்து கொடுத்தால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கூட சாப்பிட யோசிக்க மாட்டார்கள்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்
மிளகு – 1 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
எண்ணெய் , உப்பு – தேவையான அளவு

செய்முறை :

கடாயில் நெய் போட்டு அதில் மிளகு வருத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அதை சப்பாத்தி மாவில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மற்றும் கொஞ்சம் நெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு, மாவை வட்டமாக பிரட்டி காய்ந்து இருக்கும் தோசை கடாயில் போட்டு சுட்டு எடுத்தால் மிளகு சப்பாத்தி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here