People Wishes to Tamil Nadu Government
People Wishes to Tamil Nadu Government

மக்களின் கனவுகளை நனவாக்கும் அதிமுக அரசு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த நடவடிக்கைகளை தமிழக மக்கள் பாராட்டி வருகின்றனர்.

People Wishes to Tamil Nadu Government : மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பது தான் ஆட்சியாளர்களுக்கு அழகு. இந்த அழகான பணியை அசத்தலாக செய்து வருகிறது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகள் ஏற்கனவே மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் ஏற்படுத்தி இணையம் மூலம் ஏராளமான பணிகளை நிறைவேற்றி வருகின்றன.

மாவட்டங்கள் தோறும் திங்களன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள், ‘ அம்மா’ குறைதீர்க்கும் முகாம், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் போன்றவை நடைமுறையில் உள்ளன.

இவை தவிர, மாநில அளவில் முதல்வரின் தனிப் பிரிவு, ‘அம்மா அழைப்பு மையம்’ போன்றவற்றின் மூலமும் பொது மக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன. இதனால் குறிப்பிட்ட ஒரு பிரச்சனைக்காக ஒருவர் பல இடங்களிலும் மனு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்த மனுக்களை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுப்பதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

பார்க்கில் அரைகுறை உடையில் நடனம் ஆடிய கோமாளி பட நடிகை.. தாக்க ஓடிய மக்கள் – பரபரப்பு வீடியோ

காலம் காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சனைகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது, மக்களின் மனமறிந்து செயல்பட்டு வரும் முதல்வர் உடனடியாக ஆக்‌ஷனில் இறங்கினார். இது தொடர்பான அறிவிப்பையும் நேற்றைய சட்டசபை கூட்டத்தில் சுடச்சுட வெளியிட்டார்.

விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர், ’’அரசின் எல்லா துறைகளிலும் செயல்பட்டு வரும் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது.

இதற்காக ‘முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்’ ஒன்றை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ரூபாய் 12.78 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். முதற்கட்டமாக 100 இருக்கைகளுடன் செயல்படவுள்ள இந்த மையம் பின்னர் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களில் வேலைவாய்ப்பு கோரி அளிக்கப்படும் மனுக்களே அதிகளவில் உள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு இந்த புதிய மையத்தில் பெறப்படும் அத்தகைய மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, தேவைப்பட்டால் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, உரிய வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

எதிர்பாராத விபத்துகளில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதி – தமிழக முதல்வர் அறிவிப்பு

’’இந்த புதிய திட்டத்தின் மூலம் பல்வேறு அரசு துறைகள் தொடர்பான புகார் மற்றும் குறைகளை மனுதாரர் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். இத்தகைய மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி உறுதியளித்தார்.

ஆக மொத்தத்தில் குக்கிராமங்கள் முதல் நகர்ப் பகுதிகள் வரை வாழும் மக்கள் இனி தங்கள் பிரச்சனைகளுக்காக அங்கே இங்கே என பல இடங்களுக்கும் அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே தங்களின் பிரச்சனைகளுக்கும், குறைகளுக்கும் தீர்வு காண முடியும்.

ஒரு காலத்தில் கனவாக இருந்தவற்றையெல்லாம் இப்போது நனவாக்கி வருகிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு இன மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.