புத்தம் புது காலை விடியாதா என்ற படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள லோனர் என்ற பகுதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

People Response for PPKV : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, சூர்யா கிருஷ்ணா மற்றும் ரிச்சர்டு ஆன்டனி ஆகியோர் இணைந்து உருவாக்கி உள்ள கதை தான் புத்தம் புது காலை விடியாதா. இந்த படம் 5 பகுதிகளாக உருவாகி உள்ளது.

புத்தம் புது காலை விடியாதா.. ரசிகர்களை கவர்ந்த அர்ஜூன் தாஸின் லோனர்.!!

கடந்த வருடம் வெளியான புத்தம் புது காலை படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் நேரடியாக OTT-ல் வெளியாகி உள்ளது. இதில் ஹலீதா ஹமீம் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், லிஜோமோல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லோனர் காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி உள்ளது.

உலகக் கோப்பை ஆட்டம் : அயர்லாந்தை அலற விடுமா, இன்று இந்திய அணி

புத்தம் புது காலை விடியாதா.. ரசிகர்களை கவர்ந்த அர்ஜூன் தாஸின் லோனர்.!!

தவறுதலாக தனது முன்னாள் காதலி லிஜோமோல் வீட்டுக்கு உணவு ஆர்டர் செய்து அனுப்பி வைக்கிறார் அர்ஜூன் தாஸ். இது தவறுதலாக நடந்து விட்டது என ஒரு வாய்ஸ் மெஸேஜிம் அனுப்பி வைக்கிறார். அர்ஜூன் தாஸ் குரலை கேட்டு காதல் நினைவுகளுக்குள் செல்கிறார் லிஜோமோல். அடுத்து என்ன நடந்தது என்பது தான் இதன் கதைக்களம்.

இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் லிஜோமோல் ஆகியோர் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுபோல் அர்ஜுன் தாஸின் குரல் ரசிகர்களை கட்டிப் போடுகிறது.

Cook With Comali 3 Official Contestants List : புது போட்டியாளர்களின் விவரம்! | HD

லோனர் மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மற்ற நான்கு பகுதிகளும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.