Pelli Chooplu Remake in Tamil | Vijay Deverakonda | Ritu Varma | Vishnu Vishal | Tamannaah | Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Pelli Chooplu Remake in Tamil :

விஜய் தேவார கொண்டா நடித்த பெல்லி சூப்லு படமும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிப்பதாக கூறி அப்படத்திற்கு பொன்னொன்று கண்டேன் என பெயர் வைத்தனர்.

அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

தன் லேண்ட்மார்க் படத்துக்கு முன் ஜெயம் ரவி செய்த விஷயம் – வைரலாகும் செய்தி!

ஆனால் அதற்கு முன்பே விஜய் தேவார கொண்டா நடித்த பெல்லி சூப்லு படமும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிப்பதாக கூறி அப்படத்திற்கு பொன்னொன்று கண்டேன் என பெயர் வைத்தனர்.

மேலும் தமன்னா இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் எனவும் கௌதம் மேனன் தயாரிக்க அவருடைய உதவியாளர் இப் படத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவிப்பானது வெளியானது ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை இதன் படப்பிடிப்பு தொடங்காமலே இருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் மீண்டும் தொடங்குவதாக தகவல் கசிந்துள்ளது. இந்த முறை விஷ்ணு விஷால் மட்டுமே இப்படத்தில் இருப்பதாகவும் தமன்னா கௌதம் மேனன் மற்றும் இயக்குனர் மாறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.