Pei mama

Pei Mama First Look : பேய் மாமாவாக பிரபல நடிகர் வடிவேலு ரி- என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன

தமிழ் சினிமாவின் வைகைப்புயல், காமெடிகளின் அரசன், மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவன் என்றால் அது வடிவேலு தான். இதை யாராலும் மறுக்க முடியாது.

இவர் ஹீரோவாக நடித்திருந்த 23-ம் புலிகேசி படத்தின் படத்தின் இரண்டாம் பாகம் 24-ம் புலிகேசி என்ற பெயரில் உருவாக இருந்தது. இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

ஆனால் திடீரென இப்படத்தின் படப்பிடிப்புகள் பாதியில் நின்றதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் தற்போது வடிவேலு பேய் மாமா புதிய படத்தின் மூலமாக ரி என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்க உள்ளார்.

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.