Beetru Movie

Peetru Movie : தமிழ் சினிமாவில் தாதா 87 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ. உலக நாயகன் கமல்ஹாசனின் சத்யா படத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தை அடுத்து இவர் தற்போது பீட்ரு என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை மாநகரத்தின் மாமன்னனாக பீட்ருவின் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை உறுதி செய்யும் விதமாக சில போஸ்டர்களும் இணையத்தில் வெளியாகியிருந்தது.

இந்த படத்தின் நாயனாக ஹம்சவரதன் என்கிற ஹம்சன் நடித்து வருகிறார். பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனான இவர் மானசீக காதல் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை ரவிச்சந்திரன் தான் இயக்கி இருந்தார்.

அதன் பின்னர் புன்னகை தேசம், ஜூனியர் சீனியர் உள்ளிட்ட படங்களில் நடித்து அஜித், விஜய்க்கு இணையான நடிகரானார். இவர் இறுதியாக பிறகு என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஹம்சன் தற்போது பீட்ரு கதையால் கவர்ந்திழுக்கப்பட்டு நடிக்க வந்துள்ளார்.

இப்படத்தில் பல முக்கிய பிரபலங்களும் காமெடி நடிகர்களும் இணைந்து நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இப்படம் குறித்த அப்டேட்கள் வெகு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Beetru Movie

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.