Peerkangai Poriyal Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Peerkangai Poriyal Recipe :

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் – ஒரு கப்,
தக்காளி – ஒன்று,
பூண்டு – 5 பல்,
சின்ன வெங்காயம் – 1/4 கப்,
உப்பு – தேவைகேற்ப,
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் சிறிதளவு,
மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,
கடுகு – சிறிதளவு,
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை

தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

1) கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, பீர்க்கங்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

மாங்காய் சட்னி – சமைக்கலாம் வாங்க!

2) நன்கு வதக்கிய பின்னர், மிளகாய் தூள், மசாலா தூள், மஞ்சள் தூள், தக்காளி மற்றும் பூண்டு அரைத்த விழுது சேர்த்து நன்றாக வேகவிடவும்.

3) மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பீர்க்கங்காய் கலவையுடன் சேர்க்கவும்.

4) பின்னர் தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.  பீர்க்கங்காய் பொரியல் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here