Peeling Fingertips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Peeling Fingertips :

🤲 உள்ளங்கைகளில் தோல் உரிவது ஒரு சாதாரண பிரச்சினை தான். இந்த தோல் உரிதல் பொதுவாக வறண்ட சருமம், எக்ஸிமா, சூரிய ஒளி தாக்குதல், சோரியாஸிஸ், வைட்டமின் ஈ குறைபாடு,

அடிக்கடி கை கழுவுதல், கெமிக்கல் மிகுந்த சோப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துதல், வறண்ட அல்லது குளிர்ந்த பருவ நிலை மாற்றம், அழற்சி இவற்றால் ஏற்படுகிறது.

🤲 உணவில் தினம் ஒரு கீரை, காய்கறிகள் எடுத்துக்கொள்வது, வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இதனைக் குறைக்கலாம்.

🤲 மேலும், குளிக்கும்போது ஒரு காலை மற்றொரு பாதத்தால் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால், காலில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி, ஊட்டத்தை அளிக்கும்.

தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா?

🤲 ஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் லெமன் மற்றும் தேனை சேர்த்து பத்து நிமிடத்திற்கு கைகளை அந்த நீரில் வைக்க வறண்ட சருமம் மென்மையாகும்.

🤲 விட்டமின் ஈ ஆயிலை கைகளில் தடவி மசாஜ் செய்யவும்.

🤲 வெள்ளரிக்காயை உங்கள் கைகளில் தடவி நன்றாக தேய்த்து, 10 -15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

🤲 தினமும் படுப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை கைகளில் தடவிக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here