வசந்தபாலனின் ஒவ்வொரு படமும் ஒரு ரகம். ஜெயில் திரைப்படமும் அப்படித்தான் இருக்கும் என நம்புவதாக பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

Pc Sriram Wishes to Jail Team : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இசை அமைப்பாளராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய இவர் தற்போது நடிகராகவும் திரையுலகில் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் வெளியாக உள்ளது.

தியேட்டர் மூடிடுவாங்கன்னு பயமா இருந்தது – Actor Gautham Karthik OpenTalk | Anandam Vilayadum Veedu

உலகம் முழுவதும் நாளை பிரமாண்டமாக வெளியாக உள்ள இந்த திரைப்படம் பற்றி தற்போது முன்னணி ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் டுவிட் செய்துள்ளார்.

நாளை ‘ஆஷஸ்’ மேட்ச் : இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

இதுகுறித்த அவரது பதிவில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் முதல் அங்காடித் தெரு வரை அனைத்து படங்களும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள். ஜெயில் திரைப்படமும் அப்படித்தான் என தெரிவித்துள்ளார். மேலும் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை எம் எஸ் எம் பிலிம் ட்ரேடர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.