PC Sreeram to work with Keerthy Suresh : Remo, Sivakarthikeyan, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

PC Sreeram to work with Keerthy Suresh  :

ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.

அதன்பின் அவருடைய கேரியரே மாறியது. அதுவரை நாயகர்களின் நாயகியாக இருந்த அவர் அதன்பின் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.

குறிப்பாக தெலுங்கில் விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இதுபோக நாகார்ஜுனா ஜோடியாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

விஜய்யை சந்தித்து கதை கூறினேனா? உண்மையை உடைத்த அருண்ராஜா காமராஜ்!

இந்தப் படங்கள் போக தற்போது இன்னொரு தெலுங்கு படத்திலும் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார். அறிமுக இயக்குனர் இயக்கும் இதன் படப்பிடிப்பு ஜூன் 13ம் தேதி ஸ்பெயினில் தொடங்குகிறதாம்.

இந்த படத்துக்காக அதிரடியாய் உடல் எடையைக் குறைத்த கீர்த்தி, தற்போது ஒல்லிக் குச்சி உடற்கட்டுக்கு மாறி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இது ஒருபக்கமிருக்க தற்போது இன்னொரு தெலுங்கு படத்திலும் கீர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். நிதினின் 29-வது படமான இதில் ரெமோ படத்துக்கு பின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மீண்டும் கீர்த்தியுடன் இணைகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.