விதார்த், லட்சுமி பிரியா, கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான பயணிகள் கவனிக்கவும் படம் எப்படியிருக்கும் என்பதைப் பார்க்கலாம் வாங்க.
Payanigal Kavanikavum Review : மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விக்ருதி படத்தின் தமிழ் ரீமேக்தான் பயணிகள் கவனிக்கவும். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான கதை. அதாவது காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர் விதார்த் மற்றும் லட்சுமி பிரியா.துபாயில் இருந்து ஊருக்கு வரும் கருணாகரனுக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்ய திட்டமிடுகின்றனர். மெட்ரோ ரயிலில் படுத்திருக்கும் விதார்த் குடிபோதையில் தூங்குகிறார் என்று போட்டோ எடுத்து வெளியிட அதன் பின்னர் அவருடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது கருணாகரனுக்கு கல்யாணம் நடந்ததா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சமூகத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை சொல்லும் வகையில் சிறப்பான படமாக இயக்குநர் இப்படத்தை கொண்டு சென்றுள்ளார்.
விதார்த் மற்றும் லட்சுமி பிரியா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக நேர்த்தியாக கொடுத்துள்ளனர்.
கருணாகரன், பிரபாகரன் என படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களது நடிப்பை திறம்பட கொடுத்துள்ளனர்.
படத்தின் இசை ஒளிப்பதிவு எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள் லைக்குகளுக்காக சம்பந்தப்பட்டவர்களை அனுமதி இல்லாமல் போட்டோ வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தெளிவாக அழகாக எடுத்துக் கூறியுள்ளது.