ஐ லவ் யூ டா என அமீரை கட்டியணைத்து காதலை சொல்லியுள்ளார் நடிகை பாவனி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி உள்ளிட்ட பல்வேறு சீரியல் களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி. சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவருடைய கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தனியாகவே வாழ்ந்து வந்த பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சக போட்டியாளரான அமீர் அவரை காதலிப்பதாக கூறி வந்தார். ஆனாலும் தாவணி காதல் குறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்த நிலையில் இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் ஜோடி போட்டு நடனமாடி வருகின்றனர்.

இப்படியான நிலையில் பாவனி அமீரின் பிறந்தநாளில் அவரை கட்டியணைத்தபடி போட்டோ வெளியிட்டு ஐ லவ் யூ டா என பதிவு செய்துள்ளார். பாவணி வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.