விபத்தில் சிக்கி முகம் முழுவதும் சிதைந்து போய் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் பவித்ரா லட்சுமி.

Pavithra Lakshmi Life History : தமிழ் சின்னத்திரையில் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. சின்னத்திரை மூலம் திரையுலகிற்கு வந்து இருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கி சிதைந்து போன முகம்.‌. பவித்ரா லட்சுமி குறித்து பலருக்கும் தெரியாத ஷாக் தகவல்.!!

அதேசமயம் பவித்ரா லட்சுமி உண்மையான முகம் இது அல்ல. அதை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாட்டிக் கொண்டார் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது இதுகுறித்து யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

திரையுலகில் அறிமுகமாகி எதையாவது சாதித்து விடுவேன் என நினைத்திருந்த நேரம். திடீரென ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கி என்னுடைய முகம் முழுமையாக சிதைந்து போய்விட்டது. விபத்தில் சிக்கி உடல் சிதைந்து போனது என் அம்மாவுக்கு கூட கூறவில்லை. நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி நானே சிகிச்சை எடுத்துக் கொண்டேன் என கூறியுள்ளார்.

என்னுடைய நண்பர்களின் உதவியால் தான் நான் என் முகத்தை சரி செய்து கொண்டேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவர் கூறியதைக் கேட்டு பவித்ரா லஷ்மியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமான நிகழ்வு உள்ளதா என பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.