அமீரின் காதலை ஏற்றுக் கொண்ட பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்பான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இதில் அமீர் என்பவர் தனது காதல் கணவரை இழந்து தனிமையில் இருக்கும் பாவனியை இந்நிகழ்ச்சியின் போதும் காதலித்து வந்தார். ஆனால் பாவனி இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரும் நண்பர்களாக பழகி வரும் நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகும் “பிபி ஜோடிகள் சீசன் 2″வில் சூப்பராக நடனம் ஆடி வருகின்றனர்.

இதன் மூலம் அமீர் பாவனி ஜோடியை பலரும் ரசித்துப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அமீரின் பிறந்த நாளன்று பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதில், அடுத்தவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பும், அடுத்தவருக்கு நல்லதையே செய்யும் உன்னை போன்ற ஒரு மனிதன் எனது வாழ்வில் கிடைத்ததை நினைக்கும்போது நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

உன்னிடமிருந்து நான் பெற்ற அதிக அக்கறையும், அன்பும் உனக்கு இந்த பூமியில் எல்லாவற்றிலும் இருந்து நிச்சயம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். எனது நல்லதிலும், கேட்டதிலும் பங்கேற்ற உனக்கு எனது நன்றிகள், உன்னை போன்ற தங்கமான மனிதருக்கு நான் நிறைய சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். லவ் யூ டா, ஹேப்பி பர்த்டே! என்று அன்பான பதிவினை பதிவிட்டிருக்கிறார். இதனால் பாவனி அமீரை ஏற்றுக்கொண்டார் என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.