Paunch Reason
Paunch Reason

Paunch Reason

ஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது தெரியுமா?

இன்றைய நிலையில் பெண்களை விட ஆண்களுக்கு தான் தொப்பை அதிகமாக வருவதாகவும், அதிலும் குறிப்பாக 76% இளம் ஆண்களுக்கு தொப்பை இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

காரணங்கள்:
▪ பீர் குடித்தால் தொப்பை வரும். கலோரிகள் அதிகம் இருப்பதால் ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.

▪ தற்போது வேலை பளு காரணமாக, மன அழுத்தம் அதிகமானதால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகி, அதுவே தொப்பைக்கு வழிவகுக்குகிறது.

▪ பெரும்பாலான ஆண்கள் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால் உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல் கொழுப்புகளாக மாறி தொப்பையை உருவாக்குகின்றன.

▪ பெண்களை விட ஆண்கள் தான், டிவி பார்க்கும் போது சிப்ஸ், வடை, போண்டா என்று சாப்பிடுகின்றனர். இதுவும் தொப்பைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

▪ அதிகமாக மது அருந்திவிட்டு, நன்கு வயிறு நிறைய அசைவ உணவுகளை உட்கொண்டாலும், தொப்பை உருவாகும்.

▪ ஆண்களுக்கு இனிப்பு பொருட்களின் மீது ஆசை அதிகம். இதுவும் தொப்பைக்கு வழிவகுத்துவிடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here