அதர்வா நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம் வாங்க.

சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ஆஷிகா, ராஜ்கிரண், ராதிகா, சிங்கம் புலி, பால சரவணன் உட்பட பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பட்டத்து அரசன்.

படத்தின் கதைக்களம் :

காளையர் கோவில் என்ற ஊரில் பொத்தாரி ( ராஜ் கிரண் ) என்பவர் தனது குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி, மகன் இறந்து விட்ட நிலையில் இரண்டாவது மனைவியின் மகன், பேரன், பேத்தி என அனைவரிடமும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். முதல் தார மகனின் மனைவி ராதிகா மற்றும் பேரன் அதர்வாவை மட்டும் குடும்பத்தில் சேர்த்து கொள்ளாமல் இருக்க அவர்கள் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கபடி வீரரான பொத்தாரி இதுவரை தோற்கடிக்க முடியாமல் இருந்து வந்த அரசகுலம் என்ற ஊரை தோற்கடிக்க காளையர் கோவில் மக்கள் ஊர் தலைவரை காட்டிலும் பொத்தாரியை கொண்டாடுகின்றனர். மேலும் பொத்தாரி தனது அடுத்த தலைமுறைகளுக்கும் கபடி சொல்லி கொடுத்து கொடிகட்டிப் பறக்கின்றனர்.

இப்படியான நிலையில் பொத்தாரி பேரன் செல்லத்துரை என்பவருக்கு ப்ரோ கபடியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க இது பிடிக்காத ஊர் தலைவரின் மகன் தாத்தாவுடன் சேர்ந்து சதி வேலை செய்ய வாய்ப்பை இழக்கும் செல்லத்துரை மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறான்.

தனது தம்பியின் மரணத்தால் கபடி விளையாடி எங்க குடும்பம் ஜெயித்து காட்டுவோம் என சவால் விடுகிறார் கபடியே ஆடத் தெரியாத அதர்வா. அடுத்து நடந்தது என்ன? கபடி போட்டியில் அதர்வா ஜெயித்தாரா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் : நடிகர் ராஜ்கிரண் முதிர்ச்சியான நடிப்பால் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்.

அதர்வா அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளார். எத்தனை முறை குடும்பம் அசிங்கப்படுத்தினாலும் அன்புக்காக திரும்ப திரும்ப போய் நிற்பது ஆச்சரியப்படுத்தினாலும் சில இடங்களில் சலிப்பை கொடுக்கிறது.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் மனதை கவர தவறுகிறது.

களவாணி போன்ற நல்ல படங்களை கொடுத்த சற்குணம் இந்த படத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஹீரோ அதர்வாவா? ராஜ்கிரணா என குழப்பம் ஏற்படுகிறது.

தம்ப்ஸ் அப் :

1. ராஜ்கிரண் நடிப்பு

2. அதர்வா நடிப்பு

3. குடும்ப கதை

தம்ப்ஸ் டவுன் :

1. திரைக்கதை

2. லாஜிக்கல் தவறுகள்

3. பேருக்கு ஹீரோயின்

REVIEW OVERVIEW
Pattathu Arasan
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
pattathu-arasan-movie-reviewமொத்தத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் பட்டத்து அரசன் பட்டய கிளப்பி இருக்கும்.