Pattas
பட்டாஸ் படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் ரிலீஸ் தேதி என்ன என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 16-ம் தேதி வெளியாகும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ரிலீஸ் தேதியில் சிறு மாற்றம் ஏற்பட்டது. அதாவது இப்படம் வரும் ஜனவரி 15-ம் தேதியே வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சென்சார் அதிகாரிகள் படத்திற்கு கிளீன் U சான்று கொடுத்துள்ளனர். இதனால் பட்டாஸ் திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.