Pattas
பட்டாஸ் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் பற்றி தகவல் ஒன்று கசிந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கொடி பட இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் வெளியாக உள்ளது.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலரை வரும் ஜனவரி 3-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.