தனுஷ் ரசிகர்களுக்கு இன்று மாலை வெறித்தனமான கொண்டாட்டம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் பொங்கல் ரிலீஸ் இல்லை என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
#pattas pic.twitter.com/PCQLN3yAZD
— Dhanush (@dhanushkraja) December 13, 2019