சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் டீசர் யூடியூபில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது ஒபேலி. என். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பு பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது.

அதன்படி இப்படத்தின் டீசர் தற்போது வரை யூடியூபில் நம்பர் 1 இடத்தை பிடித்து ட்ரெண்டிங்காகி வருவதாக படக்குழு மகிழ்ச்சியான தகவலை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அது தற்பொழுது சிம்புவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.