பத்து தல திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கான அறிவிப்பை இன்று மாலை 6:03 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.