பத்து தல படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பத்து தல.

கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க

படத்தின் கதைக்களம் :

கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபர் மற்றும் தாதாவான சிலம்பரசன் தான் தீர்மானிக்கிறார். இப்படி இருக்க முதல்வர் சந்தோஷ் பிரதாப் திடீரென காணாமல் போகிறார். இந்த நேரத்தில் கௌதம் கார்த்திக் தாதாவான சிம்புவுடன் அடியாளாக வேலைக்கு செல்கிறார். அதன் பிறகு தான் அவர் போலீஸ் அதிகாரி சிம்புவை பிடிப்பதற்காக அடையாளாக சேர்ந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

அடுத்து என்ன ஆனது? முதல்வர் காணாமல் போனதற்கு என்ன காரணம்? சிம்புவை பிடித்தாரா கௌதம் கார்த்திக்? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் : நடிகர் சிம்பு இந்த படத்தில் வில்லனாக மாறுபட்ட நடிப்பில் மிரட்டி உள்ளார். ஆனால் சிம்பு முதல் பாகத்தில் மட்டுமே இடம்பெறுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம் உள்ளது. ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்க எடிட்டிங் கச்சிதம்.

தம்ப்ஸ் அப் :

1. சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பு

2. இசை

3. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. சிம்புவின் காட்சிகள் குறைவாக இருந்தது கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுக்கிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.