சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்து இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு கெளதம் கார்த்திக் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் ஆக்‌ஷன் நாடகத் திரைப்படமாக தயாராகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் டீஜய் அருணாச்சலம், கலையரசன், ஜோ மல்லூரி மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன்” நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படம் குறித்த அப்டேட் களுக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.

அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நம்ம சத்தம்” என்னும் பாடல் நாளை Feb 3 சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 12:06 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்திருக்கிறார். இதனால் மிகுந்த ஆர்வத்தில் இருக்கும் சிம்புவின் ரசிகர்கள் இப்பதிவினை வைரலாக்கி வருகின்றனர்.