சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒப்பேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி தற்போது வரை ரசிகர்களால் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரவபூர்வமான அப்டேட் வெளியாகி அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

அதன்படி பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக அதிகாரவபூர்வமான தகவலை படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சிம்பு ரசிகர்கள் அப்போஸ்டரை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.