கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் “பத்தல பத்தல” பாடலின் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், சூர்யா என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். உலகம் முழுவதும் இந்த படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வந்தது.

"பத்தல பத்தல" பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு - உற்சாகத்தில் ரசிகர்கள்.

தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூலை தாண்டி பாகுபலி 2 சாதனையை முறியடித்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் ரசிகர்கள் அதிகமாக விரும்பிய “பத்தல பத்தல” பாடல் அரசியல் வரிகள் ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ளது என பல கண்டனங்கள் எழுந்ததின் படத்திலிருந்து இப்பாடல் நீக்கப்பட்டது.

"பத்தல பத்தல" பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு - உற்சாகத்தில் ரசிகர்கள்.

அதனால் இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோவை மட்டுமே ரசிகர்கள் பார்த்து ரசித்து வந்த நிலையில் தற்போது இப்பாடலுக்கான வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப் போவதாக படக்குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தனர். அதேபோல் இன்று மாலை 6 மணிக்கு இந்த “பத்தல பத்தல” பாடலின் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இப்பாடலின் வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Pathala Pathala Video | VIKRAM | Kamal Haasan | Anirudh Ravichander | Lokesh Kanagaraj