Pasiparuppu Puttu :
Pasiparuppu Puttu :

Pasiparuppu Puttu :

பாசி பருப்பு பூட்டு :

பாசிப்பருப்பு உடலுக்கும், எலும்புக்கும் மிகவும் நல்லது. உணவில் பருப்பு வகைகளை அதிகமாக சேர்த்து கொள்வதின் மூலம், உடலில் பலம் அதிகமாகும். அத்துடன் எலும்பின் உறுதி அதிகமாகும்.

தேவையா பொருட்கள் :

1. பாசிப்பருப்பு – 2 கப்

2. வெல்லம் – ½ கப்

3. தேங்காய் துருவல் – சிறிது

4. ஏலக்காய் தூள், நெய் – 1 ஸ்பூன்

5. உப்பு – தேவைக்கு

செய்முறை :

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் அதனை உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி அதனை இட்லி வெக வைப்பது போல வெக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, அந்த பாசிபருப்பு இட்லியை தனியாக எடுத்து கட்டி இல்லாமல் உதிர்த்து கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு பாத்திரதில் வெல்ல கரைசல் தயாரித்து வைத்துக்கொண்டு அதனை, உதிர்த்த பாசிப்பருப்பி‌ல் சிறிது சிறிதாக கலந்து கட்டிகள் இல்லாமல் களரி கொள்ள வேண்டும்.

அந்த வெல்ல கரைசல் சேர்த்த உதிரியான பாசிப்பருப்பில், நெய், ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி எடுத்தால் சத்தான பாசிப்பருப்பு புட்டு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here