பசங்க பட நடிகர் கிஷோர் தனது சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் பசங்க. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகர் கிஷோர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிசோடா, சகா போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர் தன்னைவிட நான்கு வயது மூத்தவரான பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இவர்களின் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக தற்போது நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.