வானத்தைப்போல சீரியல் நடிகையை மணக்க உள்ளார் பசங்க பட புகழ் கிஷோர்.

தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்று பசங்க. இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கிஷோர்.

வானத்தைப்போல சீரியல் நடிகையை மணக்கும் பசங்க பட நடிகர் - வைரலாகும் புகைப்படங்கள்.!!

இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நிலையில் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். தற்போது இவர் சீரியல் நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகை ப்ரீத்தி தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி, வானத்தைப்போல, லட்சுமி கல்யாணம், தெய்வம் தந்த வீடு, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

வானத்தைப்போல சீரியல் நடிகையை மணக்கும் பசங்க பட நடிகர் - வைரலாகும் புகைப்படங்கள்.!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் இவர் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/CmoS7n9jI5-/?igshid=YmMyMTA2M2Y=