Parvathy Nair

Parvathy Nair :

எனக்கு பல காதல் உணர்வுகள் இருந்தாலும் என்னுடைய முதல் காதலர் தல அஜித் சாருடன் தான் என முதல் காதல் என பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் தல அஜித். இவரை பிடிக்காத நடிகைகளே இல்லை என்றே கூறலாம்.

தற்போது அப்படி தான் பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

அப்போது நான் பள்ளியில் படிக்கும் போது பலர் மீது காதல் உணர்வுகள் ஏற்பட்டன, ஆனாலும் தல அஜித் தான் என்னுடைய முதல் காதலர் என கூறியுள்ளார்.

ஆனால் தற்போது நான் அவருடைய படத்திலேயே நடித்து விட்டேன் என கூறியுள்ளார். பார்வதி நாயர் கெளதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்திலும் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.