Paruppu Payasam

Paruppu Payasam :

நாம் உடலில் தேவையான அளவிற்கு சர்க்கரை சத்து இல்லை என்றால் நினைவாற்றல் குறைய தொடங்கும், அதனை இது போன்று இனிப்பு சேர்த்து கொண்டால் அது போன்ற குறைகளை குறைக்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாசி பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கிண்ணம்.

பொடித்த வெல்லம் – அரை கிண்ணம்.

நெய் – தேயையான அளவு.

பால் – 2 டம்ளர்.

முந்திரி, திராட்சை – 10.

ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை :

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் நன்கு வேகவைத்து, மசித்து கொள்ள வேண்டும். நீரில் வெல்லத்தை கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் அதனை வடிக்கட்டி எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.

பாலை நன்கு காய்ச்சி, அதில் மசித்த பருப்பு விழுது, வெல்ல கரைசல் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பின் தனியாக ஒரு பாத்திரதில் நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொறிந்த பிறகு இதனை அந்த பருப்பு மசியலுடன் சேர்த்து கலக்கி சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான பருப்பு பாயசம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here