Parthiban Tweet About OS7 Response : Tweet Inside | Kollywood Cinema news | Tamil Cinema News | Oththa Serupu Size 7 | OS 7 Movie Reviews
பார்த்திபன் ஒத்த செருப்பு குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் சமூக வளையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Parthiban Tweet About OS7 Response : தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பார்த்திபன். ஒத்த ஆளாக இவர் இயக்கி நடித்து தயாரித்து வெளியிட்டு இருந்த திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் குறித்து பார்த்திபன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டீவீட்டில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் இருந்து படங்களை கழிவிறக்கம் ( பதிவிறக்கம் ) செய்து பார்ப்பது அருவருப்பான செயல் என குறிப்பிட்டுள்ளார்.

இனியும் இப்படியொரு படம் எடுப்பியான்னு இரட்டை செருப்பால என் 7-ம் அறிவை அடித்து கொள்ளணும், ஆனால் தியேட்டரில் கிடைக்கும் வரவேற்பிற்கு இன்னும் நிறைய செய்ய தோன்றுகிறது என குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

மேலும் அந்த போஸ்டரில் பாசக்கார ரசிகர்கள் கொடுத்த பாராட்டே எனக்கு ஆஸ்கார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.