நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் மேடையில் பேச முடியாமல் நெகிழ்ந்து நின்ற வீடியோ வெளியாகியுள்ளது.

Parthiban Emotional Moments : வித்தியாசமான கதை, திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பார்த்திபன். இவரின் பரிசோதனை முயற்சி சில சமங்களில் வெற்றி பெறாமல் போனாலும், சில சமயம் வெற்றி பெறுவதுண்டு. இதற்கு 2014ம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படமே சாட்சி. ஆனால், அவர் கடைசியாக இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.

பிக் பாஸில் அஜித் பற்றி பேசுனதெல்லாம் கட் பண்ணி தூக்கிட்டாங்க – வைரலாகும் அபிராமியின் அதிர்ச்சி வீடியோ.!

தற்போது அவர் இயக்கியுள்ள திரைப்படம் ஓத்த செருப்பு. இப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படம் சமீபத்தில் சிங்கப்பூர் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டை பெற்றது. அப்போது மேடையில் பேசிய பார்த்திபனுக்கு அழுகை வந்துவிட்டது. ஆனால், அதை மறைக்க முயன்று, பேச்சை தொடர முடியாமல் விக்கித்து நின்றார். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here