Parthiban overtakes Kamal Haasan
Parthiban overtakes Kamal Haasan

தமிழ்த்திரை உலகில், எதையும் வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர் பார்த்திபன்.

இவர், தன்னுடைய முதல் திரைப்படமான ‘புதிய பாதை’ படத்திலேயே தமிழக அரசு வழங்கும் இரண்டு மாநில விருதுகளையும், ஒரு தேசிய விருதையும் வென்று கவனம் ஈர்த்தார்.

தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் “பொண்டாட்டி தேவை”, “சுகமான சுமைகள்”, “உள்ளே வெளியே” மற்றும் “புள்ள குட்டிக்காரன்” என்று கொடுத்து, சிறந்த இயக்குனராகவும் நல்ல நடிகராகவும் வலம் வந்தார் பார்த்திபன்.

அந்த நிலையில் தான் கடந்த 1999-ம் ஆண்டு அவருக்கான இரண்டாவது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அவருடைய “ஹவுஸ்புல்” என்ற திரைப்படமும், தமிழக அரசு வழங்கும் இரு மாநில விருதுகளையும், ஒரு தேசிய விருதையும் வென்று அசத்தியது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, உலகநாயகன் கமல்ஹாசனை போலவே, வித்தியாசமான பல முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்து வரும் பார்த்திபன், கடந்த 2019-ம் ஆண்டு “ஒத்த செருப்பு” என்கின்ற திரைப்படத்தை வெளியிட்டார். ஒரே ஒரு நடிகர் மற்றும் படம் முழுக்க தோன்றி நடித்த ஒரு வித்தியாசமான படைப்பு.

இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி, உலகநாயகன் கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படம் வெளியான அதே நாளில் வெளியானது பார்த்திபனின் “டீன்ஸ்” திரைப்படம். உண்மையில், இந்தியன் 2 திரைப்படத்தை விட ஆண் அதிக வரவேற்பு பெற்று படமாக மாறியது “டீன்ஸ்”.

இந்நிலையில், சுமார் இரண்டு மாத காலம் கழித்து, தற்பொழுது OTT தளத்திற்கு அந்த திரைப்படம் வந்திருக்கிறது. அமேசான் பிரைம் OTT தளத்தில் அந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காலச் சுழற்சியில் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்; ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் தானே.!